வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
கருவிகள் மற்றும் வசதிகள்
 

Tamil Text Editor

தமிழ்  உரை எடிட்டர்

மின் ஓலை என்பது ஒரு எளிய தமிழ் எடிட்டர்.  இந்த எழுத்துக்கூட்டு சரிபார்ப்பான் தமிழ் சொற்களின் வடிவமைப்பை ஆதாரமாக கொண்டு, அடிக்கடி வரும் சொற்களை பயன்படுத்தி சொல் திருத்துதலுக்கு தமிழ் மார்பாலஜிகல் அனலைசரை பயன்படுத்துகிறது. இதில் தவறான எழுத்துக்கூட்டலுடன் உள்ள சொற்களுக்கு பதிலாக மாற்று சொற்களை தர மற்றும் அதை மதிப்பீடு செய்ய எடிட் டிஸ்டென்ஸ் என்ற நவீன அணுகுமுறையும் பயன்படுத்தப்படுகிறது.


Tamil Optical Character Reconization

தமிழ் OCR (பொன்விழி) உரை படிமங்களை, உதாரணத்திற்கு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை, உரை ஆவணங்களாக மாற்றுகிறது.  உரை அடையாளங்காணல்  எனப்படும்  OCR  மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட படிமங்களுக்குள் புதைந்த உரையை பதிப்பித்து, மீண்டும் பயன்படுத்தமுடியும்.   OCR பேட்டர்ன் ரிகக்னிஷன் என்ற ஒருவகை செயற்கை அறிவுத்திறனை பயன்படுத்தி பக்கத்தில் உள்ள தனிப்பட்ட எழுத்துக்களை அடையாளம் காண்கிறது. இதில் நிறுத்தக்குறிகள், இடைவெளிகள், மற்றும் வரி முடிவுகள் போன்றவைகளும் அடையாளம் காணப்படும்.

லெர்ன்ஃபன் ஸிஸ்டம் தயாரித்த இந்த பொன்விழி மென்பொருளில் நல்ல தரமுள்ள காகிதத்தில் நல்ல தரத்துடன் அச்சடித்த தமிழ் உரையின் முடிவு 100% சதவிகிதம் சரியானதாக வரும். பயிற்சி இல்லாமலேயே இதனால் பல எழுத்துருக்களை அடையாளம் காண முடியும்.  கிடைக்கின்ற எழுத்துரு தகவல்களுடன் ஒத்துப்போகாத எழுத்துருக்களுக்கு,  ஒரு குறிப்பிட்ட எழத்துருவை அடையாளம் காணுமாறு  OCR-ற்கு பயிற்சி அளிக்கமுடியும். தேவைப்பட்ட திருத்தங்களை செய்ய விசேஷ வசதிகள் உள்ளன.  உதாரணத்திற்கு, தவறான சொல்லிற்கு வலது புறம் கிளிக் செய்தால் அதற்கென்று உள்ள முதல் திருத்தத்திற்கு அது மாறிவிடும்.  குறிப்பிட்ட வரியை தன்னியக்கமாக பார்ப்பது, உரையிலிருந்து பத்திகளை உருவாக்குவது ஆகியவை சில விசேஷமான அம்சங்கள்.

 


Tamil Typing Tutor New

தமிழ் தட்டச்சு பயில்வான் புதியது